Powered By Blogger

Sunday, October 7, 2012


செவ்வியல் நூல்கள்
செவ்வியல் நூல்கள் என வரையறுக்கப்பட்டவை அனைத்தும் கி.பி. 6 ஆம் நூற்றாண்டிற்கு முந்தியவை. தனித்தன்மை கொண்டவை. 41 செவ்வியல் நூல்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.





Sunday, March 25, 2012

Saturday, March 17, 2012

சென்னை 35-வது புத்தக கண்காட்சியில் 14-01-2012 அன்று நடைபெற்ற மணிமேகலைப் பிரசுர நூல்கள் வெளியீட்டு விழாவில் அற்புதமான ஆன்மீக விஷயங்கள் 1000 நூல் வெளியிடும் நிகழ்ச்சியின் புகைப்படங்கள்.





Sunday, January 8, 2012

காலமும் கடமையும்

நேரத்தை வீணாக்கியவன் வாழ்க்கையை வீணாக்கியவன் ஆவான்..
நான் ஒரு முறை அமெரிக்காவில் ஒரு பிரபல பத்திரிகை ஆசிரியரைச்
சந்திக்கச் சென்றிருந்தேன். சரியான மின் தூக்கியைக் கண்டுபிடித்து
அவரது அறைக்குப் போவதற்குள் ஏழு வினாடிகள் தாமதமாகிவிட்டது.
அவர் என்னைக் கேட்ட கேள்வி முதுகுத் தண்டில் அடித்தாற் போல்
கூனிக் குறுகச் செய்து விட்டது. தாமத்தத்திற்கு மன்னிப்புக் கேட்ட போது
அவர் “You Indians” என்று கேலியாகச் சொன்னார் அவர் லேனா
தமிழ்வாணனை மட்டும் சொல்லியிருந்தால் கூடப் பொறுத்திருப்பேன்
ஒருவர் செய்த தவறுக்காக ஒரு நாட்டையே பழிப்பது என்ன நியாயம்?
அன்றிலிருந்து நான் நேரம் தவறுவதே இல்லை.
நேரத்தின் அருமை நமக்குத் தெரிய வேண்டுமானால்
சிலரைக் கேட்டால் தெரியும். ஒரு ஆண்டின் அருமையை உணர வேண்டு
மானால் ஒரு மதிப்பெண் குறைவால் தேர்வில் தோல்வியுற்ற ஒரு
மாணவனைக் கேட்க வேண்டும். ஒரு மாதத்தின் அருமையை உணர
குறைப் பிரசவமாகக் குழந்தை பெற்ற தாயைக் கேட்க வேண்டும். ஒரு
வாரத்தின் அருமையை உணர வாரப் பத்திரிகை ஆசிரியரைக் கேட்க
வேண்டும்.ஒரு நாளின் அருமையை உணரத் தினக்கூலிகள், அன்றாடங்
காய்ச்சிகள் நடைபாதைக் கடைக்காரர்களைக் கேட்க வேண்டும். ஒரு மணி
நேரத்தின் அருமையை உணர மருத்துவரைக் கேட்க வேண்டும் பத்து
நிமிடத்தின் அருமை காதலித்தவர்களுக்குத் தான் தெரியும். ஒரு நிமிடத்தின்
அருமையை உணர ரயிலைக் கோட்டைவிட்டவர்களைக் கேட்க வேண்டும்.
ஒரு வினாடியின் அருமையை உணர சாலையில் விபத்தைச்
சந்தித்தவர்களைக் கேட்க வேண்டும். ஒலிம்பிக் பந்தயங்களில் தங்கப்
பதக்கம் வென்றவருக்கும் வெள்ளி வென்றவருக்கும் இடையில்
வித்தியாசம் ஒரு மில்லி செகண்ட் தான் இருக்கும். ஒரு மில்லி செகண்ட்
என்பது ஒரு வினாடியில் நூறில் ஒரு பங்கு.இன்னும் ஒன்று இருக்கிறது
அது தான் மைக்ரோ செகண்ட். அமெரிக்காவில் உள்ள ஒரு சூப்பர்
கம்புயூட்டர். ஒரு மைக்ரோ செகண்டில் ஒரு கோடியே 60 லட்சம்
கணக்குகளைப் போட்டுவிடுகிறது.
நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு நாம் செய்ய வேண்டிய
வேலைகளை முன்னுரிமை உள்ளது அவசரமானது சாவகாசமாகச் செய்ய
வேண்டியது என்று பிரித்துக் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் ஒரு
நாளில் முக்கிய நேரம்(Prime Time) என்று ஒன்று உண்டு. அதைக்
கண்டுபிடித்து அந்த நேரத்தில் முக்கியமான வேலைகளைச் செய்யலாம்.

( சென்னையில் நடைபெற்ற 35-வது
புத்தக கண்காட்சியில் 07.01.2011
அன்று லேனா தமிழ்வாணன்
அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து)

Saturday, January 7, 2012

சுயதரிசனம்

"நான் காலத்தை வீணாக்காமல் இன்னும் சற்று அதிகமான இலக்கியங்களைப் படித்திருந்தால்
இன்னும் எவ்வளவோ அழகான முத்துக்களைஅள்ளித் தெளித்திருக்க முடியும்"
- கண்ணதாசன்