Sunday, December 1, 2013
Monday, August 12, 2013
சென்னை 36-வது புத்தக கண்காட்சியில் 13-01-2013 அன்று நடைபெற்ற மணிமேகலைப் பிரசுர நூல்கள் வெளியீட்டு விழாவில் “லேனா தமிழ்வாணனின் பயண இலக்கியங்கள் ஒரு பார்வை” நூல் வெளியிடும் நிகழ்ச்சியின் புகைப்படங்கள்.

Wednesday, June 5, 2013
Monday, March 11, 2013
Sunday, March 10, 2013
சிகப்பு
ரோஜாக்களும் தப்புத் தாளங்களும்!
காலையில், இரவில், கடற்கரை ஓரத்துச்
சாலையில், சந்தியில், ஜனங்களின் நெரிசலில்,
அந்தி மயங்கும் அந்தப் பொழுதில்,
சந்திப்பேன் உன் சுந்தர முகத்தை!
இருநாளா? ஒரு நாளா? எத்தனையோ மாதங்கள்,
இருவருமே சந்தித்தோம்; என்ன பயன் இறுதியிலே?
உன் எழில் பருகும் என் நிறம் கூட
செந்நிற மாதே! உன் நிறம்தானே!
இலக்கணம் மீறாக் கவிதையைப் போல,
இடைவெளி விட்டே, ஏகிடுவாய் நீ!
உன்னைத் தொட்டு, உறவாடிட நான்,
எண்ணிடும் நாளெலாம், இனியவள் நீயோ,
அஞ்சி நடுங்கி, ஆறடி விலகி,
வஞ்சிக் கொடி போல், வளைந்தோடிடுவாய்!
இன்று மட்டும் என்னடி வந்தது?
அவசரப்பட்டு, அனுமதி தந்தாய்!
அப்படி என்ன அஆவசரம் கண்ணே,
எப்படி நடையில் தப்படி வந்தது?
பாட்டில் தப்பிய தாளத்தைப்போல்,
கோட்டைத் தாண்டி விட்டோம், வீழ்ந்தோம்!
முத்தம் இழைத்துன் முகத்தைத் தொட்டேன்;
சத்தமிட்டே நீ, சாய்ந்தாய் தரையில்!
நடுத்தெருவில் முத்தமிட்டால்,
நாசம்தான் விளையுமென்று,
எடுத்துக் காட்டத்தான்,
இப்பிறவி எடுத்தோமா?
[மோதிக் கொண்ட இரு
‘சிடி’ பஸ்களில்
‘சிடி’ பஸ்களில்
ஒன்று மற்றொன்றைப்
பார்த்து பாடிய
பார்த்து பாடிய
கற்பனைக் கவிதை.]
Subscribe to:
Posts (Atom)